இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசு பதில் வழங்கிவிட்டது – ரணில்
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு விடையம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் பதில் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று ஜனாதிபதி மகிந்த ராஸபக்ஸ தலைமையிலான தூதுகுழு, ரணில் விக்ரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழுவை சந்தித்தது.
இதன்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்;டமைப்பை அழைக்க வேண்டும் என்றால், அந்த தெரிவுக்குழுவிற்கான உரிய நியமங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரியிருந்தது.
இதன்பின்னர் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்தை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சம்பந்தனிடம் விளக்கத்தையும் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒழுங்குபத்திர கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் பதில் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதில் நேற்று இரவு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவிற்கு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே வி பி ஆகிய கட்சிகளுக்கு அனுப்புமாறு ரணில் விக்ரமசிங்க தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply