சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அமைச்சரவை கூடியபோது ஜனாதிபதி இது தொடர்பான யோசனையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது கணவரான சரத் பொன்சேகாவை நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்தார் என அனோமா பொன்சேகா இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சரத் பொன்சேகாவை நாளை காலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிபதி சுனில் ராஜபக்ஸ இன்று உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply