முள்ளிவாய்க்கால் நினைவு தினம்! இலங்கைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தூதரகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதேபோல எழும்பூரில் உள்ள சிலோன் வங்கி, புத்த ஆலயம் உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கும், அலுவலங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ம் ஆண்டில் மே 17, 18-ம் திகதிகளில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகினர்.

இச் சம்பவத்தில் இறந்த மக்களை நினைவுகூரும் வகையில் தமிழ் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகம், எழும்பூரில் உள்ள சிலோன் வங்கி, புத்த ஆலயம் உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக இருக்கும் பொலிஸாரை விட, கூடுதலாக பொலிஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேபோல இலங்கை சார்ந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும்இ பொலிஸரின் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply