ஒபாமாவிடம் விவாகரத்து கேட்ட மிஷெல்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 2000ம் ஆண்டு சிகாகோ சட்டசபைக்கு நடந்ததேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது மனைவி மிஷெல் அறிவுரை கூறியுள்ளார்.

அதை ஒபாமா கண்டு கொள்ளவில்லை. இதில் கோபம் அடைந்த மிஷெல், ஒபாமாவை விவாகரத்து செய்வதற்கு ஆவணங்களை தயார் செய்துள்ளார்.

இந்த தகவல், எட்வர்ட் கிளைன் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. புத்தகத்தில் கிளைன் மேலும் கூறியிருப்பதாவது:

2000 ஆண்டில் சிகாகோவில் நடந்த தேர்தலில் பாபி ரஷ்ஷை எதிர்த்து ஒபாமா போட்டியிட்டார். இது அவரது மனைவி மிஷெலுக்கு பிடிக்கவில்லை.

தேர்தலில் ஒபாமா தோல்வி அடைந்தார். திருமணமாகி அவர்களுக்கு அப்போது 8 ஆண்டுகள் ஆகியிருந்தது. தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற தயாராகி விட்டார் மிஷெல்.

இதனால் மன அழுத்தத்தில் ஒபாமா இருந்தார். அவர் தற்கொலை செய்து கொள்வாரோ என்று கூட நண்பர்கள் பயந்தனர். நல்லவேளை ஒபாமாவை மிஷெல் விவாகரத்து செய்யவில்லை.

அதன்பின்இ இருவரும் தங்கள் கருத்து வேறுபாடுகள் குறித்து பேசி தீர்த்துக் கொண்டனர். அதன்பின்இ 2005ம் ஆண்டு இலினாய்ஸ் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு ஒபாமா வெற்றி பெற்றார். அதன்பின், அரசியல் வாழ்க்கையில் மனைவியின் நம்பிக்கையை பெற்றார்.

அதன்பின் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு அதிபரானார். விவாகரத்து செய்யும் அளவுக்கு கருத்து வேறுபாடுகள் எழுந்ததை ஒபாமா – மிஷெல் இருவருமே பகிரங்கமாக ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இப்போது 21 ஆண்டுகள் ஆகின்றன.

13 வயது மலியாஇ 9 வயது சஷா ஆகிய 2 பெண் குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர். இவ்வாறு ´தி அமெச்சூர்´ புத்தகத்தில் கிளைன் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply