வடமாகாணத்தில் மூன்றரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்
வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களில் 3 அரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர் என வட மாகாண ஆளுனர் ஐீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
நேற்று பலாலி படைத்தளத்தில் நாட்டை காத்த தேசிய வீரர்களின் நினைவு தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் நடைபெற்ற 30 வருட பேரானது படைவீரர்களின் அர்பணிப்பினால முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு பலதுறைகளில் அவிபிருத்தி நடைபெற்றுள்ளது என வடமாகாண ஆளுனர் குறிப்பிட்டார்.
மக்கள் போர் ஒழிக்கப்பட்ட காரணத்தினால் தமது வழமையான வாழ்க்கையை நடாத்த முடிகின்றது. வட பகுதி பொருளாதார நடவடிக்கை மேன்மை அடைந்து மக்கள் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர்.
தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டுவகின்றனர். அதே போன்று எதிர்காலத்திலும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மக்களின் வாழ்வாதாரம் மேலும் உயர்வடையும் என்றும் குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நிலைமை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அரச ஊழியர்களுக்கு இராணுவத்தினர் சிறந்த பங்களிப்பை உதவிகளை செய்து வருகின்றனர்.
உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என பிராத்தனை செய்கின்றேன் என குறிப்பிட்ட ஆளுனர் ஐp.ஏ.சந்திரசிறி காயமுற்ற படைவீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.
நாட்டை காத்த படைவீரர்களின் நிகழ்வு மத குருமார்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது இறந்த படைவீரர்களின் நினைவுத்தூபிக்கு யாழ்.மாவட்ட ஆரச அதிபர் உற்பட அதிதிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
பாடசாலை மாணவர்கள் இராணுவ வீரர்களுக்கு மலர் கொடுத்து தமது நன்றி உனர்வை தெரிவித்தனர். உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டன. அத்துடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply