ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிக்கை ஹிலாரியிடம் கையளிப்பு

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிங்டனை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்று பீரிஸினால் கிளாரி கிளிங்டனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவினை மேலும் அதிகரித்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அமைச்சர், அமெரிக்க வர்த்தக குழுவினரையும் சந்தித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜீ.எல்.பீரிஸ், கடந்த திங்கட்கிழமை வொசிங்டனை சென்றடைந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply