பயணித்துக் கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் பலி

இந்திய உ‌த்தர‌பிரதேச‌த்த‌ி‌ல் தனியார் பேரு‌ந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பேர் உட‌ல் கரு‌கி ப‌லியா‌‌யின‌ர். 10‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

உத்தரபிரதேச மாநிலம் பக்ரியாச் மாவட்டத்‌தின் பைசாபத் நகரைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஆஜ்மீரில் உள்ள சுபி புனிதத்தலத்திற்கு தனியார் பேரு‌ந்து மூலம் சென்று கொ‌ண்டிரு‌‌ந்தன‌ர்.

தேசிய நெடுஞ்சாலை‌யில் பழைய பேப்பர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது மோதிய வேக‌த்‌தி‌ல் பேரு‌ந்து ‌தீப்பிடித்து எ‌ரி‌ந்தது. அதனா‌ல் அல‌றி பய‌ணிக‌ள் பேரு‌ந்‌தி‌ல் இரு‌ந்து கு‌தி‌‌க்க முய‌ன்றன‌ர்.

70 பே‌ர் ஒரே நேர‌த்‌தி‌ல் இற‌ங்க முய‌ன்றதா‌ல் அவ‌ர்களா‌ல் வெ‌ளியே வர முடிய‌வி‌ல்லை. இதனா‌ல் ‌தீ‌‌யி‌ல் ‌சி‌‌க்‌கி 25 பே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லியா‌யின‌ர்.

பேரு‌ந்‌தி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌‌க்க முய‌ன்ற 10‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் அரு‌கி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இது கு‌றி‌த்து தகவ‌ல் அ‌றி‌‌ந்த ‌தீயணை‌ப்பு ‌வீர‌ர்க‌ள் ‌விரை‌ந்து ‌தீயை அணை‌த்து கரு‌கி ‌கிட‌ந்த உட‌ல்களை ‌மீ‌ட்டு ‌பிரேத ப‌ரிசோதனை‌‌க்காக மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply