சிங்கப்பூர் வர்த்தக பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்

சிங்கப்பூரின் வர்த்தக பிரதிநிதிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஜுன் 2 ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளனர்.

சிங்கப்பூர் வர்த்த சம்மேளத்தின் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் இதில் அடங்கியுள்ளதாக அரசாங்க இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வர்த்த பிரதிநிதிகளுடனும்இ இந்த குழுவினர் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த குழுவினரின் விஜயம் மூலம் சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தகம் புதிய நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் சிங்கப்பூருடனான வர்த்தகமும் குறிப்பிடத்தக்களவில் மேம்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply