எந்தவொரு இராணுவ காவலரணும் அகற்றப்பட மாட்டது – ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ராணுவத்தினரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட வெற்றியை அர்த்தப்படும் வகையில் இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு – காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரசாங்கத்தின் ராணுவ வெற்றியை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இலங்கை மக்களை பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதற்கே ராணுவத்தினர் மனிதாபினமான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது நாட்டை கட்டியெழுப்பும் கடமை அவர்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முப்படையினரின் அணிவகுப்புகள், ராணுவ கனரக வாகனங்களின் ஊர்வலம்இ என்பன இடம்பெற்றதுடன், மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.

இதனிடையேஇ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுமேயன்றி, பிளவை ஏற்படுத்த ஒரு போதும் பயன்படுத்தப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்..

சர்வதேச ரீதியான தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள், அச்சுறுத்தல்கள் இருக்கும் வரை வடக்கில் எந்தவொரு ராணுவ காவலரண்களையும் அகற்றுவதற்கு தயாராக இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்த நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.

/a

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply