நிருபமா ராவுக்கு கறுப்புக் கொடி காட்டிய 50 பேர் கைது

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்த இறு‌தி‌க்க‌ட்ட போ‌ரி‌ல் இலங்கை அரசிற்கு, இ‌ந்‌தியாவு‌க்கான அமெ‌ரி‌க்க தூதூவர் ‌நிருபமா ராவ் உதவியதாக தெரிவித்து கறு‌ப்பு‌க் கொடி கா‌ட்டிய நா‌ம் த‌‌மிழ‌ர் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 50 பே‌‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இன்று புது‌ச்சே‌‌ரிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ‌நிருபமா ராவு‌க்கு நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த சுமா‌ர் 50 பே‌ர் கறு‌ப்பு‌க் கொடி கா‌ட்டின‌ர்.

அவ‌ர்களை கைது செ‌ய்த பொலிஸா‌ர், அ‌‌ங்கு‌ள்ள ம‌ண்டப‌த்‌தி‌ல் த‌ங்க வ‌ை‌த்தன‌ர்.

அ‌ப்போது, இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்த இறு‌தி‌க் க‌ட்ட போ‌ரி‌ல் இலங்கை அரசாங்கத்திற்கு ‌நிருபமா ரா‌வ் உத‌வி செ‌ய்ததாக அவ‌ர்க‌ள் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply