இலங்கை செயற்படுத்த உள்ள திட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கு திருப்தி
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அமெரிக்கா திருப்தி வெளியிட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டனிடம் அறிக்கை கையளித்தார்.
கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவிற்காக விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் பீரிஸ் நேற்றைய தினம் ஹிலாரி கிளின்டனை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போதே அறிக்கை கையளிக்கப்பட்டது. இதன் பின்னதாக கருத்து தெரிவிக்கும் போதே ஹிலாரி கிளின்டன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையிடம் இருந்து அமெரிக்கா முன்னேற்றமான நிலைப்பாட்டை எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply