புத்தரின் புனித பொருள்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு வைகோ எதிர்ப்பு
புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பாதீர்கள் என்று பிரதமருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதி உள்ள கடிதத்தில்,
டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு அனுப்புவதென, இந்திய அரசு, இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு, புத்தரின் பெயரை உச்சரிக்கும் தகுதி கிடையாது.
இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்புவது, உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களைப் புண்படுத்தும் செயல் ஆகும். எனவே, இதைத் தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே கடிதத்தை, பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்கா, ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கும் வைகோ அனுப்பி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply