வவுனியா, களுத்துறை தமிழ் கைதிகளும் உண்ணா விரதத்தில் குதித்தனர்

இலங்கை சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி களுத்துறை மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூறு பேர் வரையிலான கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள பல கைதிகள் மூன்றாவது நாளாகத் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள்.

தமக்கு எதிரான வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்ய வேண்டும் அல்லது பிணையில் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதை சிறைச்சாலை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதேவேளை களுத்துறை மற்றும் வவுனியா கைதிகளும் இதில் இணைந்துள்ளனர்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் களுத்துறை சிறைச்சாலை என்பவற்றில் உண்ணாவிரதம் இருப்பவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை மோசமடைந்ததையடுத்து வைத்தியர்களின் பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் விளக்கமறியல் சிறைச்சாலையைச் சேர்ந்த வயோதிபரான ஒருவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply