நிருபமா ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் கைது
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமாராவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரி பல்கலைக் கழகம் முன்பாக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சார்பில் நிருபமாராவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் நேற்று வழங்கப்பட்டது.
இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து தமிழர்களை அழித்த நிருபமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதா? என்று ஏற்கெனவே தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே ஆர்ப்பாட்டமும் நடத்தினர்
இந்நிலையில் நேற்று பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிருமபாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி பல்கலைக் கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் இயக்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply