நுவரெலியா, பதுளை மாவட்ட பகுதிகளில் நில அதிர்வு!

நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் ஒரு வகை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.30 அளவில் குறித்த மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

எனினும் இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த நில அதிர்வு குறித்து நுவரெலியா பொலிஸார், உடபுசல்லாவை பொலிஸார், மாகத்தர மற்றும் பட்டிபொல கிரேம சேவகர்கள் தனக்கு தகவல் வழங்கியதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டிபிஜி.குமாரசிறி தெரிவித்தார்.

அதன் பின்னர் உடனே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று அதிகாலை வடக்கு சிலியின் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 5.9ஆக அது பதிவாகியுள்ளது.

ஆனால் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply