பொன்சேகாவிற்கு சாதாரண மனிதரை போன்று மீண்டும் சமூகத்தில் செயற்பட சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி
சரத் பொன்சேகாவின் விடுதலை பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளமையை தான் மதிப்பதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு இவ்வாறு நிவாரணம் கிடைத்ததையிட்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பான பத்திரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 18ம் திகதி கையெழுத்திட்டதாக அவரது ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர இன்று அறிவித்தார்.
இதன்படி சரத் பொன்சேகாவிற்கு சாதாரண மனிதரை போன்று மீண்டும் சமூகத்தில் செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும் என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சரத் பொன்சேகாவின் உடல் நிலை தற்போது தேரி வருவதாக அனோமா பொன்சேகா குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply