சுரங்க பாதை கட்டும் போது வெடி விபத்து: 20 பேர் உடல் சிதறி பலி
யான்லிங்-ருசெங் நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் சுரங்க பாதை கட்டும் போது வெடிகுண்டுகள் தவறுதலாக வெடித்ததில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் மத்திய பகுதியில் ஹூனான் மாகாணத்தில் யான்லிங்-ருசெங் நகரங்கள் அமைந்துள்ளன.
இங்கு நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் சுரங்க பாதை கட்டும் பணி இடம்பெற்று வருகிறது.
இதற்காக பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகளை ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டது.
அப்போது அதில் இருந்த குண்டுகள் திடீரென வெடித்தது. அதில் 20 தொழிலாளர்கள் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். 4 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. எனவே இங்கு இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply