பாழடைந்த கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் – கோப்பாய் வசந்தபுரம் பகுதியிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த கிணறொன்றில் இருந்தே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மில்லிமீற்றர் 81 ரக மோட்டார் ரவைகள் 18 மற்றும் கை்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply