பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பா ? சொத்து பறிமுதல்
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என உரிய அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்படுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெளிவிவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் 68 ஆம் ஆண்டு கட்டளைச் சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சட்டங்களுக்கு அமைய சாத்தியமான விடயம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், சர்வதேச ரீதியாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்படுவர்களை மட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைய, அதிகார சபையினால் இனங் காணப்படும் அமைப்புக்கள் குறித்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகார சபையை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலேசித்தன் பின்னர் நியமிக்க முடியும் என அந்த ஊடக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply