கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் தகவல் இல்லை
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஆறு இலங்கையர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எம்.வி. அல்பேடோ சரக்கு கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட போது, அதில் இலங்கையர்கள் ஆறு பேர் பணியாற்றினர்.
இவர்களது நிலை குறித்து கராச்சியில் உள்ள இலங்கை தூதுவருக்கு எந்தவிதமான தகவல்களும் வழங்கப்படாமல் இருந்தது.
இருப்பினும், கடந்த நொவம்பர் மாதம் 2010ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட இந்த கப்பலில் பணியாற்றிய 7 பாக்கிஸ்தானிய மாலுமிகள் நேற்று கராச்சியை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகளினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சரக்கு கப்பலில், இலங்கை, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பணியாற்றினர் எனபது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply