தரங்குறைந்த கனியவள எண்ணெய் குறித்து விசாரணை

கனிய வள கூட்டுத்தாபனத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியினில், மேற்கொள்ளப்பட்ட அனைத்து துரித கொள்வனவு மற்றும் முகாமைத்துவம்  தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய கண்காய்வாளர் ஊடாக இந்த விசாரணைகளை மேற்கொள்ளும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர மாசடைந்த டிசலை பாவித்தது தொடர்பாக பிரதி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் உத்தியோகபூர்வ வாகனமும் இன்று பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையினுள் சுப்பர் டிசெலுக்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாசடைந்த டிசல் காரணமாக, புகையிரத திணைக்களமும், துறைமுக அதிகார சபையும், சுப்பர் டிசெல் பாவனையை தற்போது ஆரம்பித்துள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கனிய வள கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா, இந்த இரு அமைப்புக்களையும், சுப்பர் டிசெல் பாவனையை தவிர்த்து, சாதாரண டிசெலினை பாவனைக்கு உட்படுத்தும் படி வேண்டியுள்ளார்.

தற்போது டிசெலுடன் இலங்கை நோக்கி எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்த கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டால் 12 நாடுகளுக்கு ஏற்ற அளவிலான டிசலே கைவசம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாசடைந்த எரிபொருளை உபயோகித்ததன் காரணமாக பாதிப்படைந்த புகையிரத இயந்திரங்களுக்கான நட்டஈட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என புகையிரத தொழிற்சங்கம் வேண்டு கோள்விடுத்துள்ளது.

உரிய நட்டஈட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக குறிப்பிட்டுள்ளது.

மாசுபட்ட எரிபொருளை உபயோகித்ததன் காரணமாக 36 புகையிரதங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை புகையிரத ஊழியர் சங்கத்தின் செயலாளர் சுமத்திபால மானவடு தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக 3 கோடி ரூபா நட்டம் புகையிரத திணைக்களத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாசடைந்த எரிபொருளை பாவனைக்கு உட்படுத்தியதன் காரணமாக தமது சங்கத்திற்கு சொந்;தமான ஆயிரம் பயணிகள் பேருந்துகள் சேதமடைந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் சுமார் 200 பேருந்துக்கள் முற்றாக செயலிழந்து போயுள்ளதாகவும், சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply