அமெரிக்காவிலுள்ள மத ஸ்தலங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டும்!

அமெரிக்காவிலுள்ள மத ஸ்தலங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்திலுள்ள சீக்கிய கோவில் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியா இதனை தெரிவித்துள்ளது.

இந்த வியடம் குறித்து அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் மற்றும் இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கு இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைகள் தொடர்பாக உடனடியாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா கோரியதாகவும் இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே தாராளவாத துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டத்தை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply