கல்வித்துறை பிரச்சினைகள் தொடர்பில் ஐதேக குழு அமைப்பு
கல்வித்துறையில் தற்போது நிலவும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கான குழு ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதவான் டபிள்யூ எம் டி பீ வராவௌ தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த குழுவில் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி, ஜோசப் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் அக்கில விராஜ் காரியவசம், முன்னாள் பரீட்சைகள் ஆணையாளரான ஏ எம் ஆர் பீ அமரகோன் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்வித்துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக அதனை சார்ந்த 34 அமைப்புக்களுடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ நேற்று கலந்துரையாடியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply