ஹுனைஸ் பாருக்கின் சிறப்புரிமை மீறப்பட்டது! சபாநாயகர் ஏற்பு
மன்னார் நீதிவான் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை மீறியுள்ளதை தாம் ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் எழுப்பிய ஒழுங்கு பிரச்சினையொன்றின் போதே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து எச்சரிக்கை விடுத்ததாகவும் இதன்காரணமாக தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஹுனைஸ் பாருக் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பில் ஆராயுமாறு சபாநாயகர் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு உத்தவிட்டார்.
இதேவேளை, இசெட் புள்ளி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய போதெ அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இசெட் புள்ளி பிரச்சினைக்கு தீர்வுகாண நாடாhளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை அமைக்குமாறு அரசாங்கத்திற்கு இதற்கு முன்னர் வலியுறுத்தியபோதும் அதனை கவனத்தில் கொள்ளாமல் அரசாங்கம் செயற்படுவதால் இன்னும் நியாயம் கேட்டு பலர் நீதிமன்றம் சென்று கொண்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இசெட் புள்ளி பிரச்சினை தொடர்பில் உரிய பதில் அளிக்கும்படி எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உரிய அமைச்சரிடம் கோரியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply