தொழில் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் – மின்சார சபை எச்சரிக்கை

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எனினும் இந்த சுற்றுநிரூபத்தை புறக்கணித்து எதிர்வரும் 10 ம் திகதி தொடக்கம் தாம் தொழில் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply