கோமா நிலையிலிருந்த கைதியும் மரணம்
வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை அடுத்து கடுமையாக தாக்கப்பட்டு கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தில்ருக்ஷன் மரியதாஸ் என்ற தமிழ் அரசியல் கைதி உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று (07) இரவு உயிரிழந்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இத்தகவலை சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
இவருடைய மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வவுனியா சிறை அசம்பாவிதத்தில் தாக்கப்பட்ட நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதி உயிரிழந்தார்.
இத்தாக்குதலில் மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply