நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நட்டத்தை அரசாங்கம் பொது மக்கள் மீது இறக்கிவைத்துள்ளது

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில் தரம் குறைந்த டீசல் கொள்வனவு மூலம் ஏற்பட்டுள்ள பாரிய நட்டத்தை அரசாங்கம் பொது மக்கள் மீது இறக்கிவைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

1994 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் நாட்டிற்கு லாபம் பெற்றுத்தரும் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

அதன்பின்னர் கனியவளக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து மோசடி, ஊழல் நிறைந்த நிறுவனமாக மாறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தரம்குறைந்த செயற்பாடுகளை மேற்கொள்வதை சாதாரண பழக்கமாக கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தரம் குறைந்த பெற்றோல், தரமற்ற கல்வி, முறையற்ற பரீட்சை நடைமுறை என்ற வரிசையில் அரசாங்கம் தற்போது தரக்குறைவான டீசலை வழங்கி நாட்டின் முழு பொருளாதாரத்தையும் சீர்குழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது..

தரம் குறைந்த டீசல் இறக்குமதி செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇ டீசல் இறக்குமதிக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி முன்னர் இருந்த அதிகாரிகள் மீது அதனை சுமத்த முயற்சிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சுமத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply