தவறான பிரச்சாரத்தை உலக தமிழர்கள் நம்ப வேண்டாம் – கலைஞர் வேண்டுகோள்

டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரத்தை உலக தமிழர்கள் நம்ப வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெசோ மாநாடு குறித்து இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கு கலைஞர் இன்று பதில் அளித்துள்ளார்.

அதில், இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப்பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில் புனையப்பட்டது.

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதனை புரிந்துகொள்ளாமல் இலங்கை அரசு பேசுவது கவலை தருகிறது.

இலங்கை தமிழர் நலன் பேணும் முயற்சிகளை டெசோ மாநாடு முன்னெடுத்து செல்லும். இலங்கையின் தவறான பிரச்சாரத்தை இங்குள்ள தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply