நிதிக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் மத்திய வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கை
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு மொங்கோலியா உள்ளிட்ட நான்கு நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மோசடி நிதிக் கொடுக்கல் – வாங்கல் மற்றும் பயங்கரவாத நிதி கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் குறித்த நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட இந்த உடன்படிக்கை உதவும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இவ்வாறு 20 நாடுகளுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply