பாகிஸ்தான் பிரதமரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்விஸ் அஷ்ரஃப்பை, அந்த நாட்டின் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஜனாதிபதி அஷிப் அலி சர்தாரிக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இவர் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் வெளியிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் உச்ச கட்டமாக இது அமையப்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசஃப் ரஸ்ஸா கில்லாணி அந்தப் பதவியிலிருந்து நீதிமன்றத்தால் விலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply