இனரீதியான தேர்தல் பிரசாரங்களுக்கு இடமில்லை!
இனரீதியான தேர்தல் பிரசாரங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (09) தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளில் இனரீதியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவது அரசாங்கததின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் இன ரீதியாக சிந்தித்து வாக்களிக்கக் கூடாது. கொள்கை – அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தியே மக்கள் தமது தீர்ப்பை வழங்கவேண்டும் என அரசாங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
சில அமைச்சர்களும் இனரீதியான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்காது என அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply