டெசோ மாநாட்டில் இலங்கை தமிழ் கட்சி உறுப்பினர்கள் எரும் இல்லை
இந்த மாதம் 12ம் திகதி தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவாளர்களின் மாநாட்டில், இலங்கையில் இருந்து தமிழ் கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியை சந்தித்திருந்தார்.
இதன் போது டெசோ மாநாடு குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வார்கள் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்த மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறு;பினர்கள் யாரும் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கூட்டமைப்பு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் இன்றையதினம் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த மாநாட்டில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருப்பதாக அறிவித்த இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாஹு கருணாரட்ன, தமக்கு இன்னும் இந்தியா செல்வதற்கான வீசா அனுமதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த மாநாடு இலங்கை அரசாக்த்துக்கு எதிரானது இல்லை எனவும், இது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒன்று இல்லை எனவும் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply