பாகிஸ்தானில் ராணுவம்-தீவிரவாதிகள் மோதல்: 30 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள பழங்குடியினப் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த மோதலில் தீவிரவாதிகள் 25 பேரும், பாதுகாப்புப் படையினர் 5 பேரும் கொல்லப்பட்டனர். ஒரக்சாய் நகரின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற இத்தாக்குதலின்போது, தீவிரவாதிகள் அமைத்திருந்த பதுங்கு குழிகளைக் குறிவைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நிகழ்த்திய எதிர்த்தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 5 பேர் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply