புலிகளை விட அரசு மோசமாக செயற்படுகிறது : ரணில் விக்கிரம சிங்க

அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமாக செயற் பட்டுவருவதாக எதிர்க்கட்சித்தலை வர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். பாலியல் வன் முறை சம்பவங்கள், கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்கள் நாட்டில் இடம்பெற்று வருவ தாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் அதிகமானவர்கள் ஆளும்கட்சி அரசியல் வாதிகளும் அவர்களது அடியாட்களும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன பொலிஸ் மற்றும் நீதித்துறை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும் வரை யில் குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க முடியாத நிலைமை நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து வருவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply