ஆஸியில் அகதித் தஞ்ச கோரிக்கை பரிசீலனை முறையில் மாற்றம்
ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்குடன் வருபவர்களின் மனுக்களை பரிசீலனை செய்து முடிவு மேற்கொள்ளும் வரை அவர்களை ஆஸ்திரேலிய எல்லைக்கு அப்பால் உள்ள வேறு பல நாடுகளில் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் ஒரு சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை அனுமதி அளித்துள்ளது. இந்தச் சட்டம் இப்போது மேலவையான செனட்டின் ஒப்புதலுக்காகச் செல்கிறது.
அங்கும் அதற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் அகதித் தஞ்சம் கோருபவர்களின் மனுக்கள் நரௌ மற்றும் பாப்வா நியூகினியாவின் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். அகதித் தஞ்சம் கோருபவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக கவலைகள் எழுந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், முன்னாள் பிரதமர் கெவின் ரட் இந்த முகாம்களை மூடினார்.
ஆஸ்திரேலிய எல்லைக்கு அப்பால் உள்ள நாடுகளில் இந்த அகதிகள் தங்க வைக்கப்பட்டு அங்கேயே அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படுவதன் மூலம், ஆஸ்திரேலியாவில் குடியேற வருபவர்களை தடுக்கும் நோக்கிலான ஒரு கடுமையான நடவடிக்கையே இது என அதன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தோனேஷியாவிலிருந்து படகு மூலம் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறும் நோக்கும் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply