நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நாயகம் நவநீதம்பிள்ளையினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிநிதிகள் மட்டுமல்ல எவர்வேண்டுமானாலும், இலங்கைக்கு வரலாம். எவருக்கும் எதுவித தடையுமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக தவறான கருத்துக்களை கொண்டிருந்தார்கள். இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள், வாக்களித்தவர்கள் இலங்கைக்கு வருவார்களேயானால் அவர்களை நாம் வரவேற்கிறோம்.

அப்போது அவர்களுக்கு இங்குள்ள உண்மை நிலையை நேரடியாக கண்டறிய முடியும். கடந்த காலங்களில் சிலரை நாம் அனுமதிக்க வில்லை. அப்போது இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளின், மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாத நிலையில் இருந்தன. மிதிவெடிகள் அச்சுறுத்தல்களும் இருந்தன.

இப்போது மிதிவெடிகள் அகற்றும் பணிகள் 98 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளன. மீள்குடியேற்றப் பணிகளும் 100 வீதம் பூர்த்தியடைந்த நிலையில் உள்ளன.

நாம் எவ்வகையான சவால்களுக்கு முகம் கொடுத்தோம் என்பதை அவர்கள் நேரடியாக இப்போது காணமுடியும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply