இலங்கை மின்சார சபை சேவையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

இலங்கை மின்சார சபையின் நிறைவேற்றல்லாத சேவையாளர்கள் கடந்த 6 நாட்களாக முன் எடுத்து வந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் இடம் பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கபாட்டை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வேதன பிரச்சினையை முன்வைத்து கடந்த 6 நாட்களாக இலங்கை மின்சார சபையின் நிறைவேற்றல்லாத சேவையாளர்கள் சேவைப்புறக்கணிப்பை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடதக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply