டெசோ தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை ஆராய்கிறது!
சென்னையில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பில் அரசு ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலளார் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
தனி நாட்டுக் கோரிக்கையை மையப்படுத்தியுள்ள டெசோ மாநாட்டுத் தீர்மனங்கள் தொடர்பில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. இது தொடர்பில் ஆராயந்து வருகிறோம்
சில நாடுகள் குற்றம் சுமத்துவதுபோல் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ஒருபோதும் நடைபெறவில்லை என்பதை நாம் உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்திவருகிறோம்.
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் மூன்று பிரதிநிதிகள் நவநீதம் பிள்ளையின் ஏற்பாட்டில் இலங்கை வரவுள்ளதாக அறிகிறோம். அவர்களை நாம் மனப்பூர்மாக வரவேற்கிறோம்.
ஏனெனில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தும் நாடுகளின் பிரதிநதிகள் இலங்கை வந்து உண்மை நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
இந்த வரிசையிலேயே இந்திய பாராளுமன்றக் குழுவொன்று இலங்கை வந்து உண்மை நிலை அறிந்து சென்றுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply