சீன மாகாண அரசாங்கங்கள் இலங்கையில் முதலீடு
சீனாவின் மாகாண அரசாங்கங்கள் இலங்கையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் சீன மாகாண அரசாங்கங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முனைப்பு காட்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியானோவோ தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவைத் தொடர்ந்து சீன மாகாண அரசாங்கங்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்து முதலீடுகளை செய்யுமாறு சீன வர்த்தகர்களை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சீன அரச நிறுவனங்களைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply