அமெரிக்காவின் தேசிய அச்சுறுத்தல் வாய்ந்த நாடுகள் பட்டியலில் 16 நாடுகள்

ரஷ்யா உள்ளிட்ட 16 நாடுகளை தேசிய அச்சுறுத்தல் வாய்ந்த நாடுகள் பட்டியலில் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் அந்த நாடுகளின் சொத்துக்கள் மீதான முடக்கம் நீடிக்கும் எனவும் ஒபாமா கூறியுள்ளார்.

சர்வதேச அவசர பொருளாதார சக்தி சட்டத்தின்கீழ் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, ரஷ்யாவை இப்பட்டியலில் வைத்துள்ளது.

ரஷ்யா, சிரியா, ஈரான், வடகொரியா, பெலாரஸ் உள்ளிட்ட இந்நாடுகள் யுரேனியத்தை ஏற்றுமதி செய்து அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் பெற்று வருவதால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வெளிநாடுகளிடமிருந்து அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நிலவினால் தேசிய அவசர நிலை கொண்டு வருவதன்மூலம் இத்தகைய நடவடிக்கையை எடுக்க அமெரிக்க அதிபருக்கு சட்டப்பூர்வமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நாடுகளுடனான பரிமாற்றங்களை தடை செய்யவும், அவற்றின் சொத்துக்களை முடக்கவும் அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்படுள்ளது.

மேலும் அமெரிக்கா மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அத்தாக்குதலை நடத்தும் நபர்  அல்லது இயக்கம் அல்லது நாட்டின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் அதிபருக்கு அதிகாரமுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply