அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான புதிய சட்டம் நிறைவேற்றம்

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறும் நாடுகளின் முகாம்களில் கால வரையறையின்றி தங்க வைக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் இந்த சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது எனவும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த எதிர்ப்புக்களை மீறி அரசாங்கம் இந்த சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றியுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து புகலிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதனை தடுப்பது தொடர்பில் பரிந்துரைகளை செய்யும் நோக்கில், அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்ததாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில், நாரு மற்றும் பபுவா நியூகினியா ஆகிய நாடுகளில் படகுப் பயணிகள் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தின் ஊடாக புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

15 வீதமான இலங்கையர்களெ அவுஸ்திரேலியாவில் படகு மூலம் புகலிடம் கோருவதாகவும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கையை திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply