யாழ் மாவட்டமே இலங்கையில் குற்றச்செயல்கள் குறைந்த மாவட்டம்

ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் யாழ். மாவட்டம் குற்றச் செயல்கள் குறைவடைந்த மாவட்டமாக காணப்படுவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று (18) சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. வங்கியில் தங்க முலாம் பூசப்பட்டதங்க ஆபரணங்களை அடகு வைத்த சம்பவம் தொடர்பில் ஒருவரை தேடி வருகின்றோம்.

கே.கே.எஸ் வீதியில் கடை உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ். செம்மணி வீதியில் தரித்து நின்றலாறி உடைக்கப்பட்டு 80.000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் தேவாலயத்தில் இரண்டு சிலைகள் திருடப்பட்டுள்ளன.

கொடிகாமப் பகுதியில் கோப் சிற்றி உடைக்கப்பட்டு 16,800 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

நெடுந்தீவில் சூரியமின் கலம் திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இளவாளைப் பகுதியில் தனித்திருந்த முதியவரை கிணற்றுக்குள் தள்ளி அவரின் தங்கச் சங்கிலி அபகரித்தமை தொடர்பில் சந்தேகத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் யாழில் குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply