ஐ.ம.சு.கூ. வேட்பாளர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கண்காணிப்பு
வடமத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை முதல் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
கட்சி வேட்பாகளின் காரியாலங்களுக்கு சென்று, தனித்தனியாக விபரங்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுராதபுர மாவட்டத்தின் தேர்தல் செயற்பாடுகளை அவர் நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் சட்டங்களை மீறாமல், நேர்மையாக நடந்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply