T20 உலகக் கிண்ண செலவிற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் நிதியுதவி
இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள T20 உலகக் கிண்ண தொடருக்கான செலவுகளுக்கென சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
புதிய உபகரண கொள்வனவு மற்றும் ஹம்பாந்தோட்டை, பல்லேகல, ஆர்.பிரேமதாஸ மைதானங்களை புதுபித்தல் நடவடிக்கைகளுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
T20 போட்டிகளை ஏற்பாடு செய்ய நிதி தேவை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் கோரியிருந்ததென இலங்கை கிரிக்கெட் நிறுவன பொருளாளர் நுஸ்கி மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் முறைகேடுகள் குறித்து ஆராயப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடகங்கள் பலவற்றில் இது தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் இது குறித்து இன்று (18) காலை இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகக் குழு அவசரமாகக் கூடி ஆராய்ந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து அது உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply