ஆளும் கட்சி உறுப்பினர்கள் மீது அக்கட்சியை சேர்ந்தவர்களே முறைபாடு
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல் சட்டங்களை மீறி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஆளும் கட்சியினரே தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களில், பல்வேறு அமைச்சுக்களின் சொத்துக்களை பயன்படுத்தி, தேர்தல் சட்டத்திட்டங்ளை மீறி இவ்வாறு பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்கள் இவ்வாறு மீறப்பட்ட சந்தர்ப்பங்கள் குறித்து, தேர்தல்கள் ஆணையாளருக்கும் முறையிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தேர்தல் சட்டங்களை மீறி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்தும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு எதிரானதாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply