சகல பல்கலைகழகங்களும் திறக்கப்படுகின்றன

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சகல பல்கலைகழகங்களும் இன்றைய தினம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உயர்கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி மூடப்பட்ட பல்கலைகழகங்கள் இன்றைய தினம் திறக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைகழக விரிவுரையாளர் சங்க சம்மேளனமும் நிதியமைச்சின் செயலாளர் பீ பி ஜயசுந்தரவுக்கும் இடையே நேற்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்
பெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply