விடுதலைப் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு விட்டனரா? போலந்து
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு விட்டனரான என போலந்து அரசாங்கம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது போலந்துக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ராடாஸ்லோவ் சிகோர்ஸ்கீ இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
போலந்து அரசாங்கத்தின் பல்வேறு உயர்மட்ட தலைவர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உத்தியோகப் பற்றற்ற ரீதியில் போலந்து ஜனாதிபதி கொமரோஸ்கீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ராடாஸ்லோவ் ஆகியோரை பாதுகாப்புச் செயலாளர் சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு கண்காட்சியொன்றில் கலந்து கொண்ட முக்கிய இராஜதந்திரிகளுக்கு போலந்து அரசாங்கம் அளித்த விருந்துபசாரத்தின் போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
‘இலங்கையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டு விட்டனரா’ என பாதுகாப்புச் செயலாளரிடம், போலந்து வெளிவிவகார அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் இதன் போது சுருக்கமாக போலந்து வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply