இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை பாதிக்க வேண்டாம்
இலங்கை பிரச்சினையை மையப்படுத்தி, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை பாதிக்கும் அளவில் நடந்துக் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசாங்கம் தமிழக அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 256 சரத்தில் இவ்வாறான உத்தரவை பிறப்பிக்க மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உத்தரவை தமிழக முதல்வர் மீறும் பட்ச்சத்தில், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தமிழகத்தில் உள்ள சிங்களவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply