இலங்கையர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்
இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (இந்தியா) வலியுறுத்தியுள்ளது.
இலங்கை யாத்திரிகர்கள் மீது இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய பிரதானி ஆனந்த பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய – தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை கால்பந்து அணி மற்றும் மாணவர் குழுவை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு தமிழக அரசு கடந்த ஞாயிறன்று பணித்தது.
இந்த கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்த அதிகாரி ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களை அடுத்து இலங்கை பிரஜைகளை தமிழகம் செல்ல வேண்டாம் என இலங்கை அரசு எச்சரித்தது.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் அவர்களது எதிர்ப்பும் கண்டனமும் இந்தியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படக்கூடாது எனவும் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்பவர்களின் உரிமை, சுதந்திரம், மத வழிபாட்டு உரிமை என்பன உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஆனந்த பத்மநாபன் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply