அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 58 பேர் கைது
மீன்படி படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 58 பேர் இன்று (07) கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
´தெவ்மினி´ என்ற படகு திருகோணமலை கடற் பரப்பில் இருந்து 19 மைல் தூரத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 35 தமிழர்களும் 20 முஸ்லிம்களும் 3 சிங்களவர்களும் அடங்குகின்றனர். இவர்களில் 44 ஆண்களும் 6 பெண்களும் 8 சிறுவர்களும் அடங்குவர்.
இவர்கள் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மூதூர், கல்பிட்டி, நீர்கொழும்பு, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டோர் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply